கரீம்நகர்: தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் வீணவங்காவைச் சேர்ந்த சம்பத் என்ற இளைஞர் திருநங்கையாக மாறியுள்ளார். இதையடுத்து தனது பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டு, ஜம்மிகுண்டாவில் வசித்து வந்தார். அப்போது, கார் ஓட்டுநரான அர்ஷத்தை திவ்யா சந்தித்துள்ளார். பிறகு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
திருநங்கை காதலியை கரம்பிடித்த இளைஞர்.. இந்து முறைப்படி திருமணம்! - திருநங்கை திருமணம்
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் இளைஞர் ஒருவர் தான் காதலித்த திருநங்கையை காத்திருந்து கரம் பிடித்தார்.
அர்ஷத்துக்கு திவ்யா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திவ்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அர்ஷத் தெரிவித்துள்ளார். இதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனிடையே திவ்யா அண்மையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அர்ஷத்தை திருமணம் செய்ய திவ்யா சம்மதித்துள்ளார். அதன்படி, கரீம்நகரில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க:சாலையோர வியாபாரிக்கு கொலை மிரட்டல் - வைரலாகும் வீடியோ!