தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மணிகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷவி பிரகாஷ் (22). பாதுகாப்பு காவலராக பணியாற்றும் வரும் இவர், அதேபகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரை கரோனா தடுப்பூசி போடுமாறு குடும்ப உறுப்பினர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கோவிட் தடுப்பூசி பற்றிப் பரவி வரும் வதந்தி காரணமாக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர், சனிக்கிழமை(ஜுன். 12) தனது வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஷவி பிரகாஷை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனா 3.0: புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு