தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

CCTV: புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியால் உடைத்த இளைஞர் - புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை இளைஞர் சுத்தியால் உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

SBI ஏடிஎம் இயந்திரங்களை சுத்தியால் உடைத்த  இளைஞர்
SBI ஏடிஎம் இயந்திரங்களை சுத்தியால் உடைத்த இளைஞர்

By

Published : Jul 15, 2022, 8:53 PM IST

புதுச்சேரி மாநிலம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையம் எதிரே எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் வந்த இளைஞர் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த சுத்தியை கொண்டு அங்கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்தார்.

இதனையடுத்து மீண்டும் சுத்தியை தனது இடுப்பில் சொருகிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இயந்திரம் உடைக்கும் போது எஸ்பிஐ வங்கிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து அலுவலர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

இளைஞர் சுத்தியால் உடைப்பு

பின்னர் இது குறித்து எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நண்டு கடத்தல் - குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details