ஹனம்கொண்டா(தெலுங்கானா):தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள பசரகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு, இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அர்ச்சனா அவரது கணவரின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை இரவு குடும்பத்தின் உறுப்பினர்கள் வெளி அறையிலும், கணவன் - மனைவி உள் அறையிலும் உறங்கி கொண்டிருந்த வேளையில், அர்ச்சனா திடீரென ராஜூவின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜூ கூச்சல் போட்டுள்ளார். அலறலை கேட்டு உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.
மேலும், அர்ச்சனா திடீரென ஆக்ரோஷமாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட நபர் போல் நடந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜூவை மீட்டு வாராங்கல் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜூவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.