ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் கோண்டாபூரில் ஸ்ரீகாந்த்- காயத்ரி தம்பதி வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி உடல்நிலை சரியில்லாததால் அவரது உறவுக்கார பெண் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார். அப்பெண் சில மாதங்களாக காயத்ரியின் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணுக்கும் காயத்ரியின் கணவனுக்கும் உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காயத்ரி ஆத்திரமடைந்து அப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
காயத்ரி அப்பெண்ணை அவரது வீட்டிற்கு வரவழைத்து அங்கு நான்கு ஆண்களை ஏற்பாடு செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோ ரெக்கார்டிங் செய்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.