தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது - கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை, பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

By

Published : Mar 18, 2023, 8:36 PM IST

கல்புர்கி: கர்நாடகா மாநிலம் கல்புர்கியில் ஜிம்ஸ் (GIMS) மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் தான் பெண் நோயாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கல்புர்கியை சேர்ந்த மெஹபூபா பக்சா நேற்றிரவு (மார்ச் 17) மகளிர் நோயாளிகள் இருக்கும் வார்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிகிச்சையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் கடந்த 7 மாதங்களாக ஜிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது.

மனநலம் பாதித்த பெண்ணை மெஹபூபா வன்கொடுமை செய்ததை அருகில் இருந்த நபர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கிடையே அங்கிருந்து தப்ப முயன்ற மெஹபூபாவை அங்கிருந்தவர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மெஹபூபாவை கைது செய்தனர்.

இதுகுறித்து கல்புர்கி காவல் ஆணையர் சேட்டன் கூறுகையில், "மருத்துவமனை செவிலியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரம்மபுரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் எப்படி அங்கு வந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: போலி வீடியோ வெளியிட்ட பீகார் யூ-டியூபர் கைது

ABOUT THE AUTHOR

...view details