பெங்களூரு: கபடி விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு புறநகர் அட்டிபெலே பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு விழாவை முன்னிட்டு மகளிருக்கென தனியாக கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சங்கீதா(19) என்ற மாணவி, விளையாடிக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.