லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் விபூடி கந்த் என்னும் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் நேற்றிரவு (அக். 16) டியூசன் சென்டரிலிருந்து வீட்டிற்கு ஆட்டோ பிடித்து சென்றுள்ளார். அப்போது பாதி வழியில் மற்றொருவர் அந்த ஆட்டோவில் ஏறினார். அந்த நபரும், ஆட்டோ ஓட்டுநரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். அதன்பின் இளம்பெண்ணை சாலையில் வீசி சென்றனர்.
ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு - இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை
டியூசன் சென்டரிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த பெண் விபூடி கந்த் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆட்டோ ஓட்டுநரையும், அவரது கூட்டாளியையும் தேடி வருகின்றனர். இதேபோல கர்நாடகாவில் அக்.13 ஆம் தேதி டியூசன் சென்டரிலிருந்து வீடு திரும்பிய , 13 வயது சிறுமியை 51 முதியவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து கூட்டி சென்று பாலியல் வன்புணர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையு படிங்க:பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு; காவல் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!