தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2022, 10:37 PM IST

ETV Bharat / bharat

50 ஆண்டுகளாக நீடிக்கும் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் : நெகிழவைக்கும் காட்சி!

கர்நாடகாவில் இந்து - இஸ்லாமிய மதநல்லிணக்கத்திற்குச் சான்றாக இரு குடும்பங்களின் ஐம்பது ஆண்டு கால நட்பு திகழ்ந்து வருகிறது.

50 வருடங்களாக நீடிக்கும் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் : நெகிழ்மிகுக் காட்சி..!
50 வருடங்களாக நீடிக்கும் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் : நெகிழ்மிகுக் காட்சி..!

விஜயபுரா(கர்நாடகா) : விஜயபுரா மாவட்டத்தில் உள்ள முடேபிஹலா டவுனில் இந்து, இஸ்லாமிய மதநல்லிணக்கத்திற்குச் சான்றாக இரு குடும்பங்கள் திகழ்ந்து வருகின்றன. இந்த இரு வேறு மதத்தைச் சார்ந்த குடும்பங்கள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நட்புறவுடன் நீடித்து வருகின்றனர். வாசுதேவ நாராயண ராவ் என்பவரின் குடும்பமும், அலிசாபா குண்டோஜி என்பவரின் குடும்பமும் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு மிகத்தகுந்த சான்று.

50 ஆண்டுகளாக நீடிக்கும் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் : நெகிழ்ச்சிமிக்க காட்சி

இந்நிலையில், அலிசாபாவின் பேத்தியான சிஃபானாஸ் எனும் சிறுமி ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு தினமும் காலை 3 மணியளவில் எழுந்து நோன்பு வைத்து மாலை 6:00 மணி போல் நோன்பு திறந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, அலிசாபா குண்டோஜியின் பாலியகால நண்பரான வாசுதேவ சாஸ்திரி, தன் நண்பனின் பேத்தியை சிறப்பிக்க வேண்டுமென்று நினைத்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து இந்து முறைப்படி ஆரத்தியெடுத்து சிஃபானாஸை இந்து முறையில் நோன்பைத் திறக்க வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சிமிகு காட்சி இனம், மதம் என அனைத்தையும் தாண்டிய அன்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் சான்றான அழகியலை எடுத்துரைக்கிறது.

இதையும் படிங்க: கலவரம் நடந்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஒவைசி கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details