ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஹுஸ்னா-பாத் என்னும் பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து லாரி சென்றது. அந்த லாரியை சிவன் என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக முத்தையா என்பவர் உடன் இருந்தார். இருவருக்கும் சாலை குறித்து சரியான புரிதல் இல்லை. தாம் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரவு நேரம் என்பதால் இருவரும் செல்போனில் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கவுரவல்லி என்னும் பகுதியில் சென்றபோது சாலையின் நடுவே தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. இதனைக் கண்ட இருவரும் மழை நீர் தேங்கி இருக்கிறது என எண்ணி அதில் லாரியை இறக்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஆழம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பின்னர், லாரியின் உள்ளே தண்ணீர் வரத் தொடங்கியது. தொடர்ந்து லாரி இயங்காமல் தண்ணீரில் நின்றுவிட்டது. உடனடியாக லாரி ஓட்டுநரும், கிளீனரும் லாரியை விட்டு இறங்கி சாலைக்குச் சென்றனர்.
நீர்த்தேக்கத்தில் சிக்கிய லாரி பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் அருகிலுள்ள ராமாவரம் பகுதிச் சென்றனர். அங்கிருந்த கிராம மக்களிடம் தங்களது நிலைமையை எடுத்துக் கூறினர். கிராம மக்களும் சாலையில் மழை நீர் தேங்க வாய்ப்பில்லை என கூறிக்கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு பார்க்கும் போது லாரி தேங்கிய மழை நீரில் நிற்கவில்லை, அது நீர்தேக்கம் எப்பொழுதும் இங்கு தண்ணீர் இருக்கும் என தெரியவந்தது.
நீர்த்தேக்கத்தில் சிக்கிய லாரி தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கயிறு உள்ளிட்ட மீட்பு பொருள்களை பயன்படுத்தி லாரியை நீரில் இருந்து மீட்டனர். தொடர்ந்து, அவர்கள் செல்ல வேண்டிய சரியான பாதையை வழிகாட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அனுப்பி வைத்தனர். கூகுள் மேப்பை பார்த்து சென்று நிர்த்தேக்கத்திற்குள் லாரியை விட்ட சம்பவம் அப்பகுதியில் பரவத்தொடங்கே, அந்த வழிப்பாதை மூடக்கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. விரட்டிச் சென்று தாக்கிய கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!