பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா நகரத்தில் உள்ள பயல் கிராமத்தில் ‘துபே’ என்னும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூதாதையரான ஹக்கீம் பீர்பால் தாஸ் என்பவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது.
அப்போது ஒருவர், ஹக்கீமை ராவணனை வணங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில் ஹக்கீம் ராவணனை வணங்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து ஹக்கீமுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1834ஆம் ஆண்டு பயல் கிராமத்தில் ராமர் கோயிலை ஹக்கீம் கட்டியுள்ளார்.
பின்னர் அங்கு 25 அடியில் ராவணனின் சிலையையும் ஹக்கீம் நிறுவினார். இந்த காலகட்டத்தில் இருந்து, தசரா நாளில் சூரியன் மறைவதற்கு முன்பு, ஹக்கீமின் வம்சாவளியினர் ராவணனை வணங்கி வருகின்றனர். இந்த வழிபாட்டு முறை 150 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.