தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறையில் மகனை சந்தித்த நிலையில ஷாருக் கான் வீட்டில் ரெய்டு? நடிகைக்கு சம்மன்! - ஷாருக் கான் வீட்டில் சோதனை

சிறையில் இருக்கும் தனது மகன் ஆர்யன் கானை நடிகர் ஷாருக் கான் இன்று சந்தித்திருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) தற்போது ஷாருக் கானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், நடிகை அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராகும்படி என்சிபி சம்மன் கொடுத்துள்ளது.

ஷாருக் கான் வீட்டில் அதிரடி ரெய்டு
ஷாருக் கான் வீட்டில் அதிரடி ரெய்டு

By

Published : Oct 21, 2021, 1:21 PM IST

Updated : Oct 21, 2021, 2:20 PM IST

மும்பை:போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவரது பிணை மனுவை நீதிமன்றம் நேற்று (அக். 20) நிராகரித்தது.

சில மணிநேரங்களில்...

இதன்பிறகு, ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை அவரது தந்தையும், பிரபல நடிகருமான ஷாருக் கான் இன்று (அக். 21) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு நடந்த சில மணி நேரங்களில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை மன்னட் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக் கானின் வீட்டில் சோதனை நடத்தினர்.

ஷாருக் கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை

வரும் 26ஆம் தேதி விசாரணை

மேலும், என்சிபியின் மற்றொரு குழு ஒன்று பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், அவரிடம் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அளித்துள்ளது.

ஆர்யன் கான் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதையடுத்து, ஆர்யன் கானின் பிணை மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் வரும் அக். 26ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்!

Last Updated : Oct 21, 2021, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details