உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு ஆதரவாளர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து அவருக்கு அயோத்தியில் கோயில் கட்டியுள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர், உத்தரப்பிரதேச முதலமைச்சருக்குக் கோயிலைக் கட்டியுள்ளார். அயோத்தியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மவுரியா கா பூர்வா கிராமத்தில் பிரபாகர் மவுரியா என்பவர், இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயிலில், முதலமைச்சர் ஆதித்யநாத் சிலைக்கு வில் அம்பு பொருத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தினமும் மாலையில் அவருக்கு ஆரத்தி காட்டப்படுகிறது. ராமர் கோவிலை யோகி ஆதித்யநாத் கட்டியதால், யோகி ஆதித்யநாத் கோயிலை கட்டியதாக, யோகி ஆதித்யநாத் கோயிலைக் கட்டிய பிரபாகர் மவுரியா கூறியுள்ளார்.