தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேப்டன் கூல் உடன் கைகோர்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன்..! - தோணி நடிக்க இருக்கும் திரைப்படம்

Dhoni is directed by Vignesh Sivan: நடிகர் அஜித்துடன் படம் இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது தல தோனியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தோனி உடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

a-star-i-love-beyond-explanation-vignesh-shivan-shoots-with-his-role-model-ms-dhoni
தல தோனியுடன் இணையும் விக்னேஷ் சிவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 11:00 PM IST

ஹைதராபாத்:தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் தல தோனியுடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு கிட்டியதை, சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இதனால் குஷியடைந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் வலம்வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து இந்த தம்பதியினருக்கு வாடகைத் தாய் (Surrogacy) முறையில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

விக்னேஷ் சிவன் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி - நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த 'நானும் ரவுடி தான்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதனையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், இயக்குநர் மகிழ்திருமேனி அப்படத்தை இயக்கப்போவதாக படக்குழு அறிவித்தது. அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியை ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் உலகில் கூல் கேப்டன் என அழைக்கப்படும் தல தோனியுடன் ஒரு விளம்பர படத்தில் இணைந்துள்ளார். இதை விக்னேஷ் சிவன், தோனி, நடிகர் யோகி பாபு ஆகியோருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் வெகு நாளாக என் மனது ஏங்கித் தவித்ததை செய்துவிட்டேன். நான் பெரிதும் மதிப்பு கொண்டவரை வைத்து நான் படம் இயக்க போகிறேன். நான் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்தவரும், வார்த்தைகளால் குறிப்பிடமுடியாத அளவிற்கு நான் விரும்பிய ஒருவருடன் வேலை பார்க்க போகிறேன். குறிப்பாக ஆக்‌ஷன், கட் போன்று சொல்லப்போகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவின் மூலம் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, “தல தோனியுடன் படம் பண்ணுவதற்கான வாழ்த்துக்கள் என்றும், அதற்காக அதிகளவில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மற்றொருவர் எனக்கு பிடித்த இருவர் ஒரு திரையில் இணையவிருக்கின்றனர்” என்று பதிவிட்டு அவர்களின் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தல தோனியிடம் அவரது வெள்ளை டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோவை பகிர்ந்து, “என் தலைவன், என் முன்னோடி, உணர்ச்சி பொங்கியத் தருணம் மற்றும் மென்மையான மனது படைத்தவர், அவரைப்பார்க்கும் போதெல்லாம் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு என்னை அறியாமல் சிரிக்க வைக்கிறது" என பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி ஆகியோர் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த 'Let's Get Married' படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details