சருமத்தை பாதுகாப்பதிலும், முகப்பொலிவை அதிகப்படுத்துவதிலும் கற்றாழை எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இளஞ்சிவப்பு கற்றாழையின் பங்கு சருமத்திற்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், இளஞ்சிவப்பு கற்றாழையின் ஜெல்லில் அதிகப்படியான தண்ணீர் உள்ளது.
இதில் அஸ்ட்ரிஜென்ட், மாய்ஸ்ட்ரைசர் ஆகியவை சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை மென்மையாக்கி தசை சுருக்கங்களை குறைக்கிறது. இதனால் முகப்பரு மற்றும் சரும எரிச்சலை குணப்படுத்துகிறது.