கடந்த மார்ச் 14ஆம் தேதி, ஆந்திர மாநிலம் மெல்லெம்புடி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் திடீரென காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க ஊர் முழுவதும் தேடி தவித்தனர்.
இறந்த நிலையில் சிறுவனின் உடல்... குண்டூர் கொடூரம்...நடந்தது என்ன? - mellempudi
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சிறுவன் கடத்தப்பட்ட நிலையில், இறந்த நிலையில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்த நிலையில் அச்சிறுவனின் உடல் அருகில் உள்ள வயல் காட்டில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் முகத்தில் காயங்கள் இருந்தது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுவன் இறப்பதற்கு முன்பு அவரின் கை மற்றும் கால் விரல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிறுவன் பாதுகாப்பாக திரும்பிவந்துவிடுவான் என நம்பிக்கொண்டிருந்த பெற்றோர், தற்போது வேதனையில் மூழ்கியுள்ளனர். எந்தவிதமான ஆதாரங்களும் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கில் குற்றவாளிகள் திட்டமிட்டு இச்சதி செயலை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உடற்கூராய்வு நடத்தப்பட்டு பின்னர்தான் பிற தகவல்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.