பஞ்சாப்:இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. இதில் பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களிடமிருந்து பிரிந்தனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி இந்த பிரிவினையில் தன் குடும்பத்தை தொலைத்து பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய தம்பதி முஹமது இக்பால்-அல்லா ராக்கி அந்த சிறுமியை தத்தெடுத்து, அவருக்கு பீபி மும்தாஜ் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். இந்தநிலையில், பெற்றோர் பீபி மும்தாஜுடம் தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வந்தது குறித்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவர்கள் பீபியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பீபி மும்தாஜ் தனது மகன் ஷாபாஸ் உதவியுடன் பஞ்சாப்பில் உள்ள தனது குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களில் தீவிரமாக தேடினார். பின்னர் அவர் குடும்பம் பஞ்சாப் பாட்டியாலாவில் உள்ள ஷுத்ரானா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்தது.
75 ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர்களை சந்தித்த சகோதரி இதையடுத்து, முறையாக இந்தியா வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பீபி மும்தாஜ் பாட்டியாலாவில் உள்ள தனது மூன்று சகோதரர்கள் குர்மீத் சிங், நரிந்தர் சிங் மற்றும் அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்து மகிழ்ந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த இவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளப்பேரழிவு - குறைந்த அளவு நீரில் இறங்காமல் ஊழியர் முதுகில் ஏறிய பாஜக எம்.எல்.ஏ