பஞ்சாப்: லூதியானா நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த இரு மர்ம கும்பல் தங்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. திடீர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட நிலையில் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் மர்ம நபர் சுட்டதில் அந்த வழியாக சென்ற இளைஞர் மீது தோட்டா பாய்ந்தது.
படுகாயம் அடைந்த இளைஞர் சுருண்டு விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து மர்ம கும்பல் தப்பிய நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.