ஸ்ரீநகர்(ஜம்மு & காஷ்மீர்):நவான் பஜார் பகுதியில் 125 ஆண்டு பாரம்பரிய புகழ்பெற்ற ’ஜான் கேப் ஹவுஸ்’ (John Cape house) எனும் தொப்பிக் கடையில் இந்த 'காரகுலி' தொப்பிகள் எனப்படும் இந்த தொப்பிகள் ஒருவகை ஆடுகளின் தோலிலிருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த வகைத் தொப்பிகளின் காஷ்மீரின் மரியாதை மற்றும் கௌரவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தொப்பியை நான்கு தலைமுறைகளாக இந்தக் கடையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இத்தொப்பியின் தற்போதைய அக்கடையின் தயாரிப்பாளரான முஸஃப்ஃபர் ஜான் கூறுகையில், ”இந்தத் தொப்பியில் மூன்று வடிவமைப்புகள் உள்ளது. அவை, ஜின்னா பாணி வடிவமைப்பு, ஆப்கான் காரகுலி வடிவமைப்பு, ரஷ்ய காரகுலி வடிவமைப்பு ஆகும்.
இந்த வகையான தொப்பிகள் முகமது அலி ஜின்னா முதல் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை பல அரசியல் ஆளுமைகளால் அணியப்பட்டுள்ளது. முகமது அலி ஜின்னாவிற்கு காரகுலி தொப்பியை 1944ஆம் ஆண்டு எனது தாத்தா தயாரித்துத் தந்தார். எனது தந்தை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு 1984ஆம் ஆண்டு இந்தத் தொப்பியைத் தயாரித்து அளித்துள்ளார்.