தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி - lamb born in Kadapa district

நான்கு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளை பார்த்திருப்போம். ஆனால் ஆடு ஒன்று ஆறு கால்கள் கொண்ட ஆட்டுக்குட்டியை ஈன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

By

Published : Jun 13, 2021, 9:50 AM IST

ஹைதாராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் துவ்வூரைச் சேர்ந்த சின்னகுரையா என்பவர் ஆடுகள் வைத்து மேய்த்துவருகிறார். அவரது மந்தையில் உள்ள ஆடு ஒன்று அதிசயமாக ஆறு கால்களுடன் கூடிய ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது.

மேலும் அந்த ஆட்டுக்குட்டிக்கு இரண்டு சிறுநீர்க் குழாய்கள் உள்ளன. ஆனால் ஆட்டுக்குட்டியின் மலக்குடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துசெல்கின்றனர்.

ஆட்டுக்குட்டிக்கு ஆறு கால்கள் - வீடியோ

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், மரபணு குறைபாடால் இது போன்ற பிறப்புகள் நிகழ்கின்றன. அறுவை சிகிச்சையின் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பவ்யமாக நடந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை புலி - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details