டவணகேரே(கர்நாடகா):தனது 70 வயது மனைவியை 78 வயது நிரம்பிய கணவர் கொலை செய்த சம்பவம் கடந்த ஞாயிறு(அக்.9) ஹெக்டே நகரில் நடந்தேறியுள்ளது. சாமன் சாப்(78) எனும் இந்த முதியவர் ஷாகிரா பானு(70) என்கிற தனது மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார்.
இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பினும், அவர்களின் துணையின்றி தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சாமன் சாபிற்கு மிகுந்த மனநோய் இருந்து வந்ததால், அவரை எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருக்க அவரது மகன்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று(அக்.10) மிலாடி நபி பண்டிகைக் கொண்டாட்டத்திற்குப்பிறகு, இந்த முதிய தம்பதியிடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சாமன் சாப், தனது மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
70 வயது மனைவியைக் கொலை செய்த 78 வயது கணவர்...! இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த ஷாகிரா பானுவின் சடலத்தை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்த விசாரணை காவல் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 75 ஆண்டுகாலமாக பத்மநாபசாமி கோயிலில் இருந்த 'பாபியா' முதலை காலமானது!