தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதிக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை வழங்கிய திருவள்ளூர் செவிலியர் - திருப்பதியின் மகிமைகள்

திருவள்ளூரை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

திருப்பதிக்கு 70 லட்சம் மதிப்புள்ள சொத்தை வழங்கிய திருவள்ளூர் செவிலியர்
திருப்பதிக்கு 70 லட்சம் மதிப்புள்ள சொத்தை வழங்கிய திருவள்ளூர் செவிலியர்

By

Published : Dec 26, 2022, 5:47 PM IST

திருப்பதி: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி, புதிதாக தங்கள் பெயரில் கட்டிய இரண்டு மாடி கட்டட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார்.

இதையும் படிங்க: பெங்களூருவில் முதல் தமிழ் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த மயில்சாமி அண்ணாதுரை

ABOUT THE AUTHOR

...view details