புதுச்சேரி:புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றுப்பகுதியில் உள்ளது. கடலும் ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள் வலையில் ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை மீன், "புலாசா" பிடிபடும். மீன்களின் ராஜா என ''புலாசா'' மீனை இம்மக்கள் அழைக்கின்றனர். அதிக சுவையும் சத்தும் கொண்ட இந்த மீன் பிடிபடும் போதெல்லாம் ஏலம் விடப்படும். அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்கள் பாராட்டப்படுவார்கள்.
புதுச்சேரியில் 9ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை புலாசா மீன்..! - அரிய வகை மீன் விலை அதிக அளவில் விற்கப்படும்
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் பிடிபட்ட அரிய வகை புலாசா மீன் 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
அந்த வகையில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக இரண்டு கிலோ எடை கொண்ட மீன் ஒன்று 25,000 ரூபாய்க்கும் மற்றொரு மீன் 23,000 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 02) காலை ஏனாமில் இரு மீன்கள் பிடிப்பட்டன. அவை ரூ.8000, ரூ.9000 என்ற விலைக்கு ஏலம் போனது. எப்பொழுதும் இந்த அரிய வகை மீன் விலை அதிகம் வைத்து விற்கப்படும். ஆனால், இந்த முறை குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் மீனவர்கள் சோகம் அடைந்தனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு என தனி காப்பீடு திட்டம் - அமைச்சர் மெய்யநாதன்