பெங்களூரு: இளம்பெண் ஒருவர், தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு, தனக்கு ஆறு வயதாக இருந்தபோது, பெற்றோர் வேலைக்கு செல்லும்போது தன்னை பக்கத்து வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு தனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்த இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததால், அதே பகுதியில் வசித்த பெண்மணி ஒருவரிடம் கூறி, அவர்களை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். தன்னிடம் ஆபாசப் படங்களை காண்பித்து, 14 வயது வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.