தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாம்புக்கடியிலிருந்து பலரைக் காப்பாற்றிய பூசாரி பாம்புக்கடித்தே உயிரிழப்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற பூசாரி நாகபாபு என்பவர் அந்த பாம்பு கடித்து உயிரிழந்தார். இவர் பாம்புக்கடியிலிருந்து பலரைக் காப்பாற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

snake
snake

By

Published : Sep 26, 2022, 8:33 PM IST

கிருஷ்ணா:ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருதிவெனு குடிடிப்பா கிராமத்தைச் சேர்ந்த கொண்டூரி நாகபாபு சர்மா(48). பூசாரியான இவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இவரது தந்தை பாம்பு பிடிப்பவர் என்பதால், இவருக்கும் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், நாகபாபு சர்மா தசராவை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கிருதிவெனு குடிடிப்பாவுக்கு வந்தார்.

அப்போது பீத்தலவா என்ற பகுதியில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதால், கிராம மக்கள் நாகபாபு சர்மாவை அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற அவர், பாம்பை பிடித்து வெளியே எடுத்துச் சென்றபோது, பாம்பு அவர் கையில் கடித்துவிட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக மச்சிலிப்பட்டினத்திற்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து மச்சிலிப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாகபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

பாம்புக்கடியில் இருந்து பலரைக் காப்பாற்றிய நாகபாபு, பாம்புக்கடித்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கில், சுற்றுவட்டாரத்தில் இருந்த ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு நாகபாபுவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: இமாச்சலத்தில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details