சிக்கபலாபுரா(கர்நாடகா):சிக்கபலாபுரா மாவட்டம் கௌரிபிதனூர் காவல்நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை போலீசார் எடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை எலிகள் நாசம் செய்ததால் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.
பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவது வழக்கம்.ஆனால் காவல் நிலையம் போன்ற அரசு அலுவலகத்தில் பூனை இருப்பது மிகவும் அரிது. இருப்பினும், காவல்துறை அதிகாரிகள் எலிகளிடமிருந்து தப்பிக்க பூனைகளை வளர்க்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கர்நாடகா காவல்நிலையத்தில் கலவரம் செய்த எலி- பூனையை வளர்த்த புத்திசாலி காவலர்கள் எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே சமீபத்தில் இரண்டு பூனைகள் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் எங்கள் பணி சுமூகமாக இருப்பதாக அந்நிலைய காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எலிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:'ஜலபுல ஜங்கு' - இது இன்ஜினியர்கள் உருவாக்கிய லட்சுமி கருவி - குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முடியாது!