கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கும் ராஜேஷ், வஹிதா தம்பதியின் மகள் அவந்திகா (9). எப்போதும் காலையில் உற்சாகமாக விளையாடும் அவந்திகா, இன்று (ஜூலை.4) மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ராஜேஷ் தனது மகள் அவந்திகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவந்திகாவை காப்பாற்ற முடியவில்லை.
மகளின் உயிரிழப்பில் சந்தேகமடைந்த ராஜேஷ் காவல் துறையில் புகாரளித்தார். இதையடுத்து, அவந்திகாவின் தாயை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதில், வஹிதா தனது குழந்தை அவந்திகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும், வஹிதாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: ஆலமர உச்சியில் ஆன்லைன் வகுப்பு: விஞ்ஞானம் தொட்ட உச்சம்