பெலகவி(கர்நாடகா):கர்நாடகா மாநிலம் கானாபுரா தாலுகாவின் நெராசா கவுலிவாடா கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 25) மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தை மீட்கப்பட்டு உடனடியாக கானாபுரா பொது மருத்துவமனையில் உள்ள குழந்தை வார்டில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைநல மருத்துவர் டாக்டர் பவன் பூஜாரி குழந்தையை பரிசோதித்தார். சிறிது நேரம் பிளாஸ்டிக் பையில் குழந்தை இருந்ததால் உடல்நிலை மோசமடைந்தது என அவர் கூறினார்.