சிக்கமகளூரு:கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த முகமது நசீர், கடூர்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரூபாய் இரண்டு கோடி மதிப்புடைய தனது நான்கரை ஏக்கர் நிலத்தை மாட்டுத்தொழுவம், அனாதை இல்லம், முதியோர் இல்லம், பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்காக, சிக்கமகளூரில் உள்ள சுவாமி சமர்த் ராமதாசா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இதுகுறித்து முகமது நசீர் கூறுகையில், 'என் அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தபோது, கோமியத்தை குடித்து குணமடைந்தார். எனவே, எனது அம்மாவிற்கு உதவிய பசுவின் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த நான்கரை ஏக்கர் நிலத்தை, மாட்டுக்கொட்டகை மற்றும் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் போன்றவற்றைக் கட்ட, அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்துள்ளேன்.