காரைக்கால்:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் 2ஆவது மகன் பால மணிகண்டன்(13), அதே பகுயில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம்(செப். 2)பள்ளியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பினார்.
அப்போது அவருக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பெற்றோர் மாணவனைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போதுமருத்துவர்கள் பரிசோதனை செய்து விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்படி போலீசார்விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளியின் வாட்ச்மேன் மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்தது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் வாட்ச்மேனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த மாணவனின் வகுப்பில் படிக்கும் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவர்தான் என்னிடம் குளிர்பானத்தை கொடுத்து பால மணிகண்டனுக்கு கொடுக்க சொன்னதாக தெரிவித்தார்.