இம்பால் :மணிப்பூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுராசந்பூர் மாவட்டம் நியூ லம்கா பகுதியில் உடற்பயிற்சி கூடத்துடன் சேர்த்து விளையாட்டு அரங்கம் புதிதாக கட்டமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடக்க இருந்தது. மணிப்பூர் முதலமைச்சர் என். பைரன் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டு உடற் பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு அரங்கை திறக்க இருந்தார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அந்த இடமே விழாக் கோலம் பூண்டு இருந்தது. வண்ண வண்ண விளக்குகள், மேடை அலங்காரம், நூற்றுக்கணக்கான நாற்காலிக்ள் போடப்பட்டு அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவில் நிகழ்ச்சி மேடைக்கு வந்த மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேடையில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் விழா அலங்காரம் முழுவதும் வீணாகின. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :CSK Vs RR : சொந்த ஊரில் கெத்து காட்டிய ராஜஸ்தான்! புள்ளி பட்டியலில் சென்னைக்கு சறுக்கல்!