ஹைதராபாத்:தனியார் பள்ளியில் பயின்று வந்த நான்கு வயது சிறுமிக்கு அப்பள்ளி முதல்வரின் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஓட்டுநரை நேற்று(அக்.18) கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரில், “கடந்த திங்கட்கிழமை (அக்.17) 36 வயதுள்ள பள்ளி முதல்வரின் ஓட்டுநர், முதல்வர் அறைக்கு எதிரில் உள்ள லேப் வளாகத்தில் வைத்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, பெற்றோரிடம் அச்சிறுமி கூறியதாக அவரின் தாயார் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு அழுது கொண்டு வந்த போது, சிறுமியின் தாயார் விசாரித்ததையடுத்து ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளிவந்ததாகப் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வைத்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
இதையடுத்து, பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடுத்துள்ளது. மேலும், காவல்துறையினர் அப்பள்ளிக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ததாக பஞ்சாரா ஹில்ஸ் காவலர் நரேந்திரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க:திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்த குடும்பம்... உடல்களை ஆற்றில் வீசப்பட்ட கொடூரம்...