அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - அப்பர் சியாங் விபத்து
அருணாச்சல பிரதேசத்தில் பாடும் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
Etv Bharat
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசம் அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள பாடும் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் இன்று (அக். 21) விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில், விபத்துக்குள்ளானது இலகுரக ஹெலிகாப்டர் (Advanced Light Helicopter (ALH)) என்பதும் சம்பவயிடத்திற்கு சாலை வசதிகள் இல்லாததும் தெரியவந்துள்ளது.
Last Updated : Oct 21, 2022, 12:24 PM IST