தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.40,000 செலவில் இ-பைக்கை உருவாக்கி அசத்திய மெக்கானிக்...

ஆக்ராவில் மெக்கானிக் ஒருவர், நாற்பதாயிரம் ரூபாய் செலவில் இ-பைக்கை உருவாக்கி அசத்தியுள்ளார்.

mechanic
mechanic

By

Published : Aug 28, 2022, 3:10 PM IST

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே பாலுகஞ்ச் பகுதியைச்சேர்ந்த பதான் குரேஷி என்பவர், மெக்கானிக் கடை வைத்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக கடை வைத்துள்ள அவர், இருசக்கர வாகனங்களை சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இருசக்கர வாகனங்களை சர்வீஸ் செய்வதோடு, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாகனங்களின் தோற்றத்தையும் மாற்றித்தருவார்.

இந்த நிலையில், குரேஷி சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். இந்த இ-பைக்கை 45 நாட்களில் உருவாக்கியுள்ளார். இந்த இருசக்கர வாகனம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து குரேஷி கூறுகையில், "இ-பைக்கை தயாரிக்க 40,000 ரூபாய் செலவானது. இதைத் தயாரிக்க ஒன்றரை மாதங்கள் ஆனது. இந்த பைக் ஆறு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை செல்லும். பைக்கை தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

தற்போது இந்த பைக்கை கடைகளுக்குச் செல்லவும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்துகிறேன். இந்த பைக் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. எனது பைக்கை கடையில் நிறுத்தி வைத்திருந்தால், அவ்வழியாக செல்லும் மக்கள் அதை ஓட்டிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

பைக்குடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பைக்கை பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கினேன், ஆனால் யாரேனும் இதை வாங்க ஆசைப்பட்டால் தயாரித்து தருவேன். சந்தைகளில் கிடைக்கும் பிற பைக்குகளை விட என்னுடைய பைக் மிகவும் திறன் வாய்ந்தது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இந்த பைக்கிற்கு காப்புரிமை பெறுவேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டடங்கள்... 5,000 குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்...

ABOUT THE AUTHOR

...view details