குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் பிரத்யுஷா. இவர், ஆன்லைன் கடன் செயலி மூலமாக கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை திருப்பி கட்டச்சொல்லி அவரை மிரட்டி வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அந்த பெண் வீடியோவில் கூறியதாவது, ”நான் ருபீ எக்ஸ்எம் (Rupee XM) எனும் ஆன்லைன் கடன் செயலியில் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் 12 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்திவிட்டேன். ஆனால் திங்கள்கிழமை காலை 7 மணிக்குள் மீதி பணம் முழுவதும் செலுத்த வேண்டும்.
தற்கொலை எதற்கும் தீர்வை தருவதில்லை இல்லையெனில் புகைப்படங்களை மார்பிங் செய்து, நிர்வாண புகைப்படங்களை தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அனுப்புவோம் என்று கடன் முகவர்கள் மிரட்டுகின்றனர். ஆகையால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என கூறியிருந்தார். தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து இறந்தவரின் தந்தை அம்ருதா ராவ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்களகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இன்ஸ்டா நண்பனை பார்க்க விபரீத முடிவை எடுத்த 8ஆம் வகுப்பு மாணவி