பெங்களூரு: பெங்களூருவில் உள்ள விவேக் நகரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே மாநிலத்தைச் சேர்ந்த மசூரல் ஷேக் என்ற நபர் அந்த பெண்ணின் வீடு உள்ள தெருவில் வகிக்கிறார். அவர் சில நாட்களாக அங்கும், இங்கும் அலைந்து நோட்டம் விட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண் தனியாக வசித்து வருவதை உறுதி செய்த பின் கடந்த ஜூலை 2 அன்று அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
திடீரென உள்ளே நுழைந்ததால் செய்வதறியாத திகைத்த அப்பெண் அந்நபரிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். தான் பணம் தருவதாகவும், தன்னை விடக் கோரியும் கேட்டு பார்த்துள்ளார். இதனையடுத்து காப்பாற்றுமாறு கூச்சல் போட்டுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு மேல் வீட்டிலிருந்த இரண்டு திருநங்கைகள் வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.