தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் கனமழை - கழிவுநீர் கால்வாயில் கால் வைத்தவர் மாயம்! - கனமழை

ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே சாலையில் நடந்து சென்ற நபர், கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத் கனமழை
ஹைதராபாத் கனமழை

By

Published : Sep 26, 2021, 7:22 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா):கனமழை காரணமாக சாலையில் சென்ற நபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சனிக்கிழமை (செப்., 25) பெய்த கனமழையால் சாலைகளில் நீர் குளத்தைப் போல தேங்கிக் கிடந்தது. சில இடங்களில் ஆறு போல நீரோட்டம் அதிகமாக இருந்தது.

இச்சூழலில், தன் வீட்டில் இருந்து சாலைக்கு வந்த ரஜினிகாந்த் எனும் நபர், சாலையில் நடந்து சென்றுள்ளார். அவர் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தெரியாமல் கால் வைத்துள்ளார்.

நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர் கழிவு நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கழிவு கால்வாயில் கால் வைத்தவர் மாயம்

இச்சம்பவம் தொடர்பாக தற்போது காணொலி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், நீர் சூழ்ந்துள்ள சாலையைக் கடக்கும் ரஜினிகாந்த், அங்கு கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியாமல், தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். எதிர்பாராவிதமாக அதே நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்படுகிறார்.

பல இடங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேளையில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சிறுமி

ABOUT THE AUTHOR

...view details