சண்டிகர்:வாகனங்களுக்கு ஃபேன்சியாக அல்லது விஜபி நம்பர் பிளேட்டுகள் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அதற்காக அதிகளவு செலவு செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர். அப்படி ஒரு சம்பவம் சண்டிகரில் நடந்துள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த பிரிஜ் மோகன் (42) என்பவர், தனது இருசக்கர வாகனத்துக்கு விஜபி நம்பர் பிளேட் வாங்குவதற்காக, சுமார் 15 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏலத்தில் கலந்து கொண்ட அவர், CH01-CJ-0001 என்ற விஜபி நம்பர் பிளேட்டை 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.