தெனாலி (ஆந்திரா): பால்பாயின்ட் பேனாக்கள் வருகையால், நாம் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த இங்க் பேனாக்கள் (fountain pens)பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் தவிர பெரும்பாலானோர் பால்பாயின்ட் பேனாக்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆந்திர மாநிலம் தெனாலி நகரில், பேனாக்கடை நடத்தி வரும் நாராயணமூர்த்தி என்பவர், இன்றும் இங்க் பேனாக்களை பேணிக் காத்து வருகிறார்.
நம்ம "ஹீரோ பேனா"-க்களை பாதுகாத்து வரும் ஹீரோ... நாம் ஹீரோ பேனா என்று காலரை தூக்கி பெருமைப் பேசிய அந்த பேனாக்களை, இப்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பல விதமாக வடிவமைத்து விற்பனை செய்கிறார்.
இவரது கடையில் பல விதமான இங்க் பேனாக்களும், வெளிநாட்டிலிருந்து வரும் விலை உயர்ந்த பேனாக்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப தங்கம், வெள்ளி மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பேனாக்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு 30 விதமான வண்ணங்களில் இங்க் (மை) வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நாராயணமூர்த்தி பேசுகையில், "எனக்கு இங்க் பேனாக்கள் மீது உள்ள விருப்பம் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு பேனாக்களை இலவசமாக பழுது பார்த்து தருகிறேன். இப்போதும் பல இளைஞர்கள் இங்க் பேனாக்களைப் பற்றி பேசுவது வரவேற்கத்தக்கது.
மாறிவரும் காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்து, வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இங்க் பேனாக்கள் வழங்கி வருகிறேன். பேனா சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனது கடைக்கு அடிக்கடி வருவார்கள் " என்று கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ