தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவிக்குத் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட கணவன்! - crime news

திருவனந்தபுரம்: தனது மனைவிக்குத் தீ வைத்து விட்டு, பின் தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட கணவன்
மனைவிக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட கணவன்

By

Published : Mar 21, 2021, 10:32 PM IST

கேரள மாநிலம், பத்தனம்தீட்டா மாவட்டத்தில், ஒருவர் தனது மனைவிக்குத் தீ வைத்து பின் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் திருவல்லா - நெடும்பரம் நான்காவது வார்டைச் சேர்ந்த மாதுகுட்டி (65), அவரது மனைவி சரம்மா (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் தாயைக் காப்பாற்ற முயன்ற சம்பவத்தில், அவர்களது 35 வயது மகள் பலத்த காயமடைந்தார். அவர் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு குடும்பச் சண்டையால் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. பின் இது குறித்து காவல் துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் தீ பிடித்து எரிந்த ராஜஸ்தான் லாரி!

ABOUT THE AUTHOR

...view details