புனே (மகாராஸ்ட்டிரா): புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நாவலே பாலத்தில் உள்ள சரிவினால் லாரியின் பிரேக் செயலிழந்தோ அல்லது கட்டுப்பாட்டை இழந்தோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பாலத்தின் சரிவில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து சாலையில் சிந்திய எரிபொருளில் வழுக்கி பிற வாகங்கள் ஒன்றோடு என்று மோதி விபத்து நடந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தி 48 வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.