மகாராஷ்ட்ரா: துலே நகரத்தைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவரான ஆஷிஸ் பட்டேல், நந்துர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் ஏறத்தாழ ஒரு கிலோ எடையில் இருந்த கல்லீரலில் உருவான கல்லை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளார்.
இதனையடுத்து அந்த விவசாயி தற்போது நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர் ஆஷிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அறுவை சிகிச்சை இந்தியன் புக் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் சாதனை பதிவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ எடையில் கல்லீரலில் உருவான கல் இந்த அறுவை சிகிச்சை உலகில் நடத்தப்பட்ட ஓர் மாபெறும் அறுவை சிகிச்சை என்றும் கூறியுள்ளார். நந்துர்பார் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் விவசாயி ராமன் சவுரி (50), இவரின் கல்லீரலில் கல் உருவானமையால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் பல இடங்களுக்கு சிகிச்சைக்காக சென்று சரிவராததால் மருத்துவர் ஆஷிஸ் பட்டேலிடம் வந்துள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர் ஆஷிஸ் இவரிடம் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் இத்தகைய அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் மனைவிக்கு விவாகரத்து