தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாண்டியாவில் நடந்த கொடூரச் சம்பவம்: மகளின் சடலத்துடன் 4 நாட்கள் கழித்த தாய்!

கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் உள்ள ஹல்லஹள்ளி நியூ தமிழ் காலனியில் நான்கு நாட்களாக மகளின் சடலத்துடன் தாய் வாழ்ந்து வந்த கொடூரச் சம்பவம் நேற்று(மே 30) வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாண்டியாவில் நடந்த கொடூர சம்பவம்: மகளின் சடலத்துடன் 4 நாட்கள் கழித்த தாய்!
மாண்டியாவில் நடந்த கொடூர சம்பவம்: மகளின் சடலத்துடன் 4 நாட்கள் கழித்த தாய்!

By

Published : May 31, 2022, 9:51 PM IST

பெங்களூர் :கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் உள்ள ஹல்லஹள்ளி நியூ தமிழ் காலனியில் நான்கு நாட்களாக மகளின் சடலத்துடன் தாய் வாழ்ந்து வந்த கொடூர சம்பவம் நேற்று(மே 30) வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிரிழந்த 30 வயது ரூபாவின் தாய் நாகம்மா(வயது 50) தனது மகளின் மரணம் குறித்து யாரிடமும் கூறாமல் நான்கு நாட்களாக சடலத்துடன் இருந்து வந்துள்ளார்.

நான்கு நாட்களாக வீட்டில் இருந்த அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. முதலில் எலியைத் தேடிய அக்கம்பக்கத்தினர், பின்னர் வீட்டில் இருந்து வெளியே வராத நாகம்மாவையும் ரூபாவையும் காணவில்லை என சந்தேகமடைந்தனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் நாகம்மாவின் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்த போது, ​​வீட்டின் உள்பகுதியைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த மகள் ரூபாவின் சடலத்துடன் நாகம்மா அமர்ந்திருந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் வந்த காவல் துறையினர் உடலை மீட்டனர்.

30 வயதான ரூபா, ஹோம் கார்டாகப் பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, சில காரணங்களுக்கு முன்பிலிருந்து வேலைக்குச்செல்லாமல் இருந்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான ரூபா குடும்பப்பிரச்னை காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக கணவர் மற்றும் இரு குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தாய் நாகம்மா மற்றும் மகள் சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். ஏதோ ஒரு காரணத்திற்காக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், நான்கு நாட்களாகியும் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

துர்நாற்றம் வீசியதால் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனினும் ரூபாவின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சடலம் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் அங்கு வந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கல்லூரிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு - சகமாணவர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details