ஜாம்ஷெட்பூர்: 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாவூத் இப்ராஹிம் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான இவர், பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. மேலும், இவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில், கடத்தல் மற்றும் அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் தாவூத் இப்ராஹிமின் சொத்துகளை அரசு ஏலத்தில் விற்றது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டியை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படைக் குழுவினர் நேற்று (டிச. 26) கைது செய்தனர்.