போபால் :ஜோமாட்டோவில் கேஷ் ஆன் டெலிவிரி முறையில் அடுத்தடுத்து தனது முன்னாள் காதலனுக்கு உணவு ஆர்டர்களை அனுப்பி காதலி பழிவாங்கிய நிலையில், ஜோமாட்டோ நிறுவனமே அந்த பெண்ணிடம் இனி ஆர்டர் செய்வதை நிறுத்துமாறு கோரிய சம்பவம் போபாலில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கீதா. தனது முன்னாள் காதலனை பழிவாங்கும் நோக்கில் ஜோமாட்டோ மூலம் கேஷ் ஆன் டெலிவிரி முறையில் உணவு ஆர்டர் செய்து அனுப்பி உள்ளார். ஒருமுறை, இருமுறை இன்றி அடுத்தடுத்து மூன்று முறை தன் காதலருக்கு கேஷ் ஆன் டெலிவிரி முறையில் அங்கீதார் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.
இதையடுத்து, ஜோமாட்டோ நிறுவனம், முன்னாள் காதலருக்காக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அங்கீதாவிடம் கோரி விடுத்தது. இது தொடர்பாக ஜோமாட்டோ நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில், போபாலை சேர்ந்த அங்கீதா தயவு செய்து உங்கள் முன்னாள் காதலருக்கு உணவு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்.
நீங்கள் அனுப்பிய மூன்றாவது உணவு ஆர்டரையும் உங்கள் முன்னாள் காதலர் பணம் செலுத்தி வாங்க மறுத்துவிட்டார் என்றும் தயவு செய்து மேற்கொண்டு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஜோமாட்டோ நிறுவனம் ட்விட்டில் தெரிவித்து உள்ளது.