மும்பை: நவி மும்பையில் உள்ள போன்கோட் பகுதியில் நேற்று(அக்-1) நள்ளிரவு 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில், ‘இந்த பகுதியில் 20 குடியிருப்புகள் கொண்ட 4 மாடி கட்டடம் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது.
நவி மும்பையில் இடிந்து விழுந்த அடுக்கு மாடிக்கட்டடம் - ஒருவர் உயிரிழப்பு - in Navi Mumbai city
நவி மும்பையில் அடுக்கு மாடிக்கட்டடம் நேற்று (அக்-1) இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

Etv Bharatநவி மும்பையில் இடிந்து விழுந்த அடுக்கு மாடிக் கட்டடம் - ஒருவர் உயிரிழப்பு
அதில் சிக்கி 31 வயதான பிரியவர்ட் சர்வேஸ்வர் தத் என்பவர் உயிரிழந்தார். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கட்டடம் 25 ஆண்டுகள் பழமையானது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து விசாரித்துவருகிறோம். இந்த மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்களுடன், பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பகீர் வீடியோ... ஆம்பூர் அருகே கோர விபத்து... மீட்க சென்ற லாரி ஓட்டுநர்களுக்கு நடந்த விபரீதம்...