தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளுக்கு கோவில் கட்டி வழிபடும் தந்தை! - Other State News

சாலை விபத்தில் உயிரிழந்த மகளின் மீது கொண்ட தீராத பாசத்தால், கோயில் கட்டி தந்தை வழிபட்டு வரும் நிகழ்வு காண்போரை நெகிழச் செய்கிறது.

சாலை விபத்தில் உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டிய தந்தை
சாலை விபத்தில் உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டிய தந்தை

By

Published : Nov 21, 2022, 12:53 PM IST

Updated : Nov 21, 2022, 1:05 PM IST

நெல்லூர்:ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் செஞ்சய்யா(Chenchayya). இவருக்கு லக்‌ஷ்மம்மா என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர். நான்காவதாக பிறந்த பெண் குழந்தையின் பெயர் சுபலக்‌ஷ்மம்மா. சுபலக்‌ஷ்மம்மா பிறந்த பின்னர் குடும்ப சூழல் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டதாக செஞ்சய்யா கூறினார்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சுபலக்‌ஷ்மம்மா வனத்துறையில் வேலை கிடைத்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் சுபலக்‌ஷ்மம்மா பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் திடீர் உயிரிழப்பை தாங்க முடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கனவில் தோன்றிய சுபலக்‌ஷமம்மா தனக்கு கோவில் கட்டி வழிபடுமாறு தெரிவித்ததாக செஞ்சய்யா கூறுகிறார். கோவில் கட்டிய செஞ்சய்யா அதில் தன் மகளின் ஆளுயர சிலையை வைத்து பூஜை நடத்துகிறார்.

இதையும் படிங்க:Atom Expo : சர்வதேச அணுசக்தி கண்காட்சி... இந்தியர்கள் பங்கேற்பு

Last Updated : Nov 21, 2022, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details