தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறந்த மில்லியனர் விவசாயி விருது பெற்ற பி.டெக் பட்டதாரி.. பூ விளைச்சலில் சாதித்தது எப்படி? - தோட்டக்கலை செய்திகள்

Best Millionaire Farmer: தெலங்கானாவில் பூக்கள் விவசாயம் மேற்கொண்டு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிய பி.டெக் பட்டதாரி பெற்ற நபருக்கு தோட்டக்கலைத் துறையால் சிறந்த மில்லியனர் விவசாயி விருது வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:42 AM IST

தெலங்கானா: சூர்யபேட் மாவட்டம், திருமலகிரி அடுத்த தும்மலகுண்ட தான்டா பகுதியைச் சேர்ந்தவர் புக்கியா பிச்சு. 2012ஆம் ஆண்டு உயிரி தொழில்நுட்பவியல் (Biotechnology) பாடப்பிரிவ்ல் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், 2018ஆம் ஆண்டு வரை அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

ஆனால், அதுவும் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இருப்பினும் தனக்கு வேலை கிடைக்காததை நினைத்து வருந்தாமல், விவசாயம் செய்வதை கையில் எடுத்துள்ளார், பிச்சு. பின்னர் பல்வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் விவசாய முறைகளைப் பற்றி கற்றுத் தெரிந்து கொண்டுள்ளார்.

அப்போது, தோட்டக்கலை மீது ஆர்வம் கொண்ட இவர், பூக்கள் விவசாயம் குறித்தும், அதற்கு அரசுத் தரப்பில் வழங்கப்படும் மானியம் குறித்தும் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த 13 ஏக்கர் அளவில் இருந்த நிலத்தில், பூக்கள் விளைவிக்க முடிவு செய்துள்ளார்.

மேலும், தோட்டக்கலைத்துறை மானியம் உள்பட 33 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, தனது நிலத்தில் ஒரு ஏக்கரில் நர்சரி அமைத்து பூக்கள் விளைவிக்கத் துவங்கி உள்ளார். அதற்காக மாகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து, சீமை சாமந்திப்பூக்களின் (Chamomile) விதைகளைப் பெற்று வந்து விளைவித்துள்ளார்.

ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யப்படும் இந்த பூக்கள், தனக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஈட்டி தருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தான் விவசாயம் செய்யத் துவங்கியதும் கரோனா பேரிடலால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு பூக்கள் விவசாயத்தில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், புதுமையான விவசாயத்தில் ஈடுபட்டு வளர்ந்து வரும் இளம் விவசாயிகளுக்கு ஊக்கமாகத் திகழும் புக்கியா பிச்சுவை நாட்டின் சிறந்த விவசாயியாக கருதப்படுகிறார். அண்மையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற 'கிருஷி ஜாக்ரன்' எனும் விழாவில், சிறந்த மில்லியனர் விவசாயிக்கான விருதை பிச்சு பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய உழைப்பினை அடையாளம் கண்டு, அதை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய இளைஞர்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என கவலைப்படாமல், தான் மற்றவர்களுக்கு வேலை வழங்குவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் இருக்கும் இளைஞர்கள், புதுமையான முறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு விவசாயம் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டுவதோடு, மற்ற மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நிலைக்கு முன்னேறலாம்” என்று உறுதியுடன் கூறினார்.

இதையும் படிங்க:தண்ணீரை உள்வாங்கும் அதிசயக் கிணறு..முழுமையாக நிரம்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details