ஐதராபாத் :தெலங்கானா மாநிலம் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் லட்டு ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு லட்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூர் விநாயகரின் கையில் லட்டு பிரசாதம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் பூஜைகள் நடந்த பின்னர், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் நாளன்று அந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்படும்.
அந்த லட்டை பெறுவதில் பக்தர்களிடையே கடும் போட்டி நிலவும். அதன்படி கடந்த ஒரு வாரமாக ஐதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஹுசைன் சாகர் ஏரி உள்பட பல நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
ஐதராபாத்தில் விநாயகர் விசர்ஜனத்திற்கு அடுத்தப்படியாக லட்டு ஏலம் வெகு விமரிசையாக நடைபெறும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் விநாயகர் விசர்ஜன விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர், லட்டு ஏலத்தில் ஆர்வமாக கலந்து கொள்வர்.
முதன் முதலில் கடந்த 1994 ஆம் ஆண்டு லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது அப்போது லட்டு அதிகபட்சமாக 450 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனை தொடர்ந்து லட்டு பிரசாதம் ஏலம் படிப்படியாக உயர்ந்து தற்போது லட்சங்களில் ஏலம் கேட்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற லட்டு ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர்.
இறுதியாக கணேஷ் உற்சவ கமிட்டியினர் லட்டு பிரசாதத்தை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இதில் பாலாப்பூர் விநாயகர் சிலை ஊர்வலமும் தொடங்கியதும், லட்டு பிரசாதம் ஏலம் விடப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஐதராபாத்தில் உள்ள பண்டலகுடா பகுதியில் நடைபெற்று லட்டு ஏலத்தில் ஆர்வமாக கலந்து கொண்ட பக்தர்கள் லட்டு ஏலம் கேட்டனர். இதில் ஒரு லட்டு 1 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பூகழ் பெற்ற பாலாப்பூரில் லட்டு 26 லட்ச ரூபாய்க்கு மேல் ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :விரைவில் பருவமழை! நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அனுப்ப கோரிக்கை! அரசு விரையுமா என எதிர்பார்ப்பு!