கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. புதிய அரசின் கொள்கை நிலைப்பாடு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற ஆவல் மக்களிடம் எழுந்துள்ளது.
கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நடைமுறை
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நடைமுறை சர்வதேச யோகா நாள்
சர்வதேச யோகா நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றுகிறார். "Yoga For Wellness" என்ற நோக்கில் இந்தாண்டு யோகா நாள் கொண்டாடப்படுகிறது.
பொறியியல் செமஸ்டர் மறுதேர்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் மறு தேர்வு இன்று தொடங்குகிறது.
பொதுப் போக்குவரத்து தொடக்கம்
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மட்டும் இன்றுமுதல் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்குகிறது. தலைநகர் சென்னையில் காலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து தொடக்கம் இதையும் படிங்க:16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா?